என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆலங்குளத்தில் வக்கீல்-பெரியப்பா கொலை: ராணுவ வீரர் உள்பட 4 பேர் கைது
- இரட்டைக் கொலை சம்பவத்தை அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- முக்கிய கொலையாளியான சுரேசை தேடி வந்த நிலையில், அவர் நாங்குநேரி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் அசோக் குமார்(வயது 27). இவர் தென்காசி கோர்ட்டில் வக்கீலாக தொழில் செய்து வந்தார்.
இவர்களது வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்து வருபவர் குழந்தை பாண்டி. இவரது மகன் சுரேஷ்(27). இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும், அசோக்குமாரின் பெரியப்பா துரைராஜ் குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று காலை சின்னதுரைக்கு சொந்தமான வைக்கோலுக்கு தீ வைத்தனர். இது தொடர்பாக சின்னதுரை ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நேற்றிரவு சுரேஷ் தனது உறவினர்களுடன் சென்று அப்பகுதியில் உள்ள தெருவில் நின்று கொண்டிருந்த துரைராஜை சரமாரியாக வெட்டினார். பின்னர் சின்னதுரை வீட்டுக்குள் புகுந்து அசோக்குமாரையும் வெட்டிக்கொலை செய்தனர். இதனை தடுக்க வந்த அவரது உறவினர் அருள்ஜோதிக்கு கை விரல் துண்டானது. பின்னர் அந்த கும்பல் தப்பிச்சென்றது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த துரைராஜ் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார்.
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், ஆலங்குளம் இன்ஸ் பெக்டர்(பொறுப்பு) சுரேஷ் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து 2 பேர் உடலும் மீட்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த இரட்டைக் கொலை சம்பவத்தை அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரத்தில் சுரேஷ் வீட்டின் மீது கல்வீசி சேதப்படுத்தினர். இரட்டைக்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இடத்தகராறில் இந்த இரட்டைக்கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சுரேஷ், அவரது பெற்றோர் குழந்தை பாண்டி-ஜக்கம்மாள், உறவினர்கள் மகாராஜன், குமார் என்ற முருகன், சரவணன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை தலைமறைவாக இருந்த குழந்தைபாண்டி, மகாராஜன், குமார் என்ற முருகன் ஆகியோரை கைது செய்தனர். முக்கிய கொலையாளியான சுரேசை தேடி வந்த நிலையில், அவர் நாங்குநேரி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுரேசை உறவினர் சரவணன், சுரேசின் தாய் ஜக்கம்மாள் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்