search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பிளவால் சட்டசபையில் எந்த பிரச்சினையும் வராது- சபாநாயகர் அப்பாவு
    X

    அ.தி.மு.க. பிளவால் சட்டசபையில் எந்த பிரச்சினையும் வராது- சபாநாயகர் அப்பாவு

    • தமிழகத்தில் அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்களுக்கு படிப்பறிவு இல்லை என பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தெரிவித்திருப்பது வன்மையான வார்த்தை.
    • நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை கருதி கொண்டே ஜே.பி. நட்டா படிப்பறிவில்லை என தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    பாளை யூனியன் நொச்சிகுளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் காந்தியை கொன்றவர்களை மதிக்க கூடாது. அவர்களை மதிப்பது வேதனைக்குரியது.

    அ.தி.மு.க 4 அணிகளாக உள்ளது. அ.தி.மு.க. பிளவால் எந்த பிரச்சினையும் சட்டப்பேரவையில் வராது. இந்த மாதம் கூட இருக்கும் சட்டசபை கூட்டத்தின் போது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படும்.

    தி.மு.க அரசின் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அமைச்சர்களின் சாதாரணமாக பேச்சு வழக்கில் பேசுவது கூட பெரிதாக்கப்படுகிறது.

    தமிழகத்தில் அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்களுக்கு படிப்பறிவு இல்லை என பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தெரிவித்திருப்பது வன்மையான வார்த்தை. நீட் தேர்வு வேண்டாம் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை கருதி கொண்டே ஜே.பி. நட்டா படிப்பறிவில்லை என தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் பட்டதாரிகளின் சராசரி 24 சதவீதம் என்றால் தமிழகத்தில் 51 சதவீதம் ஆக உள்ளது. ஜே.பி. நட்டா தமிழகத்தில் இருப்பவர்களை விட அதிகம் படித்தவர். அவர் எய்ம்ஸ் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்தாக கூறுகிறார். அங்கு சிகிச்சை பெற செல்ல முடியுமா?.

    ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதுபடுத்தாமல் அரசின் திட்டங்களை சிறப்பாக செய்ய ஆலோசனை வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×