என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டாக்டர் இல்லாததால் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த நர்சு- குழந்தை இறந்ததால் சோகம்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சு பிரவசம் பார்த்ததால் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வடக்குபாளையம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் மனைவி சுபாஷிணி (வயது 23) தனது 2-வது பிரசவத்திற்காக சென்றார். அப்போது அங்கு டாக்டர் இல்லை. நர்சும், உதவியாளர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுபாசிணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. உடனே அங்கிருந்த நர்சு சுபாஷிணிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அழகான ஆண் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் சுபாஷிணியை உடனடியாக மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கும், இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.
தற்போது சுபாஷிணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து குழந்தையின் தந்தை கோபிநாதன் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சுபாஷிணியின் குடும்பத்தினர் குழந்தையின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். பிரவசத்தின் போது குழந்தை இறந்து பிறந்த சம்பவம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.