என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சியில் நாளை நடக்கிறது- தலைமை செயலகம் போல் பா.ஜ.க. மாநாட்டு முகப்பு தோற்றம்
- பா.ஜ.க மாநாட்டின் முகப்பு தோற்றம் சென்னை தலைமை செயலகத்தை போன்று அமைக்கப்பட்டுள்ளது.
- வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே சென்னை கோட்டை வடிவத்தில் முகப்பு தோற்றத்தை அமைத்துள்ளதாக பா.ஜ.கவினர் கூறுகின்றனர்.
பொள்ளாச்சி:
கோவை தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் பொள்ளாச்சியில் தாமரை ஆட்சி என்ற பெயரில் மாவட்ட மாநாடு கோவை ரோடு பி.கே.டி பள்ளி எதிரில் வாஜ்பாய் திடலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
இதற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்குகிறார். இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேரூரையாற்றுகிறார்.
மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மாநாட்டு திடலின் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேடைகள் அமைக்கும் பணி, மாநாட்டின் முகப்பு தோற்றம், சேர்கள், மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மாநாடு நடைபெறும் இடம், பொள்ளாச்சி நகரம் முழுவதும் பல இடங்களில் தோரணங்களும் கட்டப்பட்டு நகரமே திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது.
பா.ஜ.க மாநாட்டின் முகப்பு தோற்றம் சென்னை தலைமை செயலகத்தை போன்று அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே சென்னை கோட்டை வடிவத்தில் முகப்பு தோற்றத்தை அமைத்துள்ளதாக பா.ஜ.கவினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து பா.ஜ.க கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் கூறியதாவது:-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையம் வைத்தே இந்த மாநாடு நடக்கிறது. மேலும் 2024-ம் ஆண்டு நடக்க உள்ள எம்.பி. தேர்தலில் பொள்ளாச்சியில் இருந்து பா.ஜனதாவை சேர்ந்தவரை எம்.பியாக தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்ப உள்ளோம். இதற்காக தேர்தல் பணிகளை தற்போது தொடங்கி விட்டோம்.
இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது. முக்கியமாக கோவை, பொள்ளாச்சியில் அதிகளவிலான கனிம வளங்கள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
மேலும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பது, தென்னைக்கு உரிய விலை என மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்