என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வலிப்பால் பலியான பிளஸ்-1 மாணவி 7 மாத கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் காதலன் கைது
- கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது.
கோவை:
கோவையை சேர்ந்தவர் 16 வயது மாணவி.
இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 10-ந்தேதி மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து டாக்டர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
சிங்காநல்லூர் போலீசார் இந்த வழக்கை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர்.
கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கியது ராமநாதபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரஷேஷ்(வயது19)என்பது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
எனக்கும், மாணவிக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை அங்கு அழைத்துச் சென்றேன்.
அப்போது அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தேன். இதில் அவர் கர்ப்பமானார்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட பிரஷேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்