search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
    X

    தூத்துக்குடியில் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

    தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

    • மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
    • தேர்வு கட்டணம் பேப்பர் ஒன்றுக்கு ரூ 100-ல் இருந்து 140-ம், ரூ.160-ல் இருந்து ரூ.220 ஆகவும் உயர்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரிகளில் தேர்வு கட்டணம், சான்றிதழ் கட்டணம், நுழைவு கட்டணங்கள் மிக கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறி அதனை கண்டித்து கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கல்லூரிகளுக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் மற்றும் அனைத்து கட்டணங்களையும் கடுமையாக உயர்த்தியுள்ளனர்.

    இதனால் மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    தேர்வு கட்டணம் பேப்பர் ஒன்றுக்கு ரூ 100-ல் இருந்து 140-ம், ரூ.160-ல் இருந்து ரூ.220 ஆகவும் உயர்ந்துள்ளது.

    சான்றிதழுக்கு ரூ.500 ஆக இருந்த கட்டணம் தற்போது ஆயிரமாக உயர்ந்துள்ளது. நுழைவு கட்டணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும், இது போல் இதரக்கட்டணங்களும் பல மடங்கு அதிகமாக உயர்த்தியுள்ளது. இதனைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை கைவிட வலியுறுத்தியும் கல்லூரிகளுக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×