என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரவுடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்?- துணை கமிஷனர் சந்தீஷ் விளக்கம்
- சஞ்சய் ராஜாவிடம் 2 துப்பாக்கிகள் இருப்பதாக விசாரணையில் கூறியிருந்தார். ஏற்கனவே ஒரு துப்பாக்கி சென்னையில் பறிமுதல் செய்திருந்தோம்.
- துப்பாக்கியில் எவ்வளவு குண்டுகள் இருக்கிறது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்.
கோவை:
கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் இன்று காலை ரவுடி சஞ்சய் ராஜா என்பவர் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். போலீசார் தங்களை தற்காத்து கொள்வதற்காக பதிலுக்கு சுட்டனர். இதில் சஞ்சய் ராஜாவின் இடது காலில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்த இடத்தை கோவை மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இன்று காலை சஞ்சய் ராஜாவை கொலை வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக தனிப்படை இந்த பகுதிக்கு அழைத்து வந்தனர்.
சஞ்சய் ராஜாவிடம் 2 துப்பாக்கிகள் இருப்பதாக விசாரணையில் கூறியிருந்தார். ஏற்கனவே ஒரு துப்பாக்கி சென்னையில் பறிமுதல் செய்திருந்தோம்.
மற்றொரு துப்பாக்கியை பறிமுதல் செய்ய இங்கே அழைத்து வந்தனர். சரவணம்பட்டி பகுதியில் தான் சஞ்சய் ராஜா தங்கி இருந்தார். இதனால் இந்த பகுதியில் மறைத்து வைத்திருந்ததாக சொன்னதால் பறிமுதல் செய்ய அவரை அழைத்து வந்தனர்.
இந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கியை போல இருக்கிறது. மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தவுடன் சுட தொடங்கி விட்டார். போலீசாரை குறிவைத்து சுட்டார். நல்வாய்ப்பாக போலீசார் தப்பி விட்டனர்.
தற்பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் சுட்டதில் சஞ்சய் ராஜா காலில் குண்டு பாய்ந்தது. அவர் 10 நிமிடத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். தற்போது நல்ல நிலையில் இருக்கின்றார். சஞ்சய் ராஜா மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் இருக்கிறது.
துப்பாக்கி எங்கு வாங்கினார் என்பது குறித்து விசாரித்தபோது, பீகார், ஒரிசா என சொல்லி இருக்கின்றார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் கிடையாது. இவர் அதை செய்து வந்து இருக்கின்றார்.
இந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கியை போலவே இருக்கிறது. இன்னொரு துப்பாக்கி சற்று மாறுதலாக இருக்கிறது. அதை ஆய்வுக்கு அனுப்பினால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
இவை சட்ட விரோதமான துப்பாக்கிகள். துப்பாக்கியில் எவ்வளவு குண்டுகள் இருக்கிறது என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்