search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூரில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் பஸ் போக முடியாமல் நின்றது
    X

    வண்டலூரில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் பஸ் போக முடியாமல் நின்றது

    • பஸ் முனையத்திற்குள் உள்ள பஸ்கள் வெளியே போக முடியாமல் நின்றதால் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
    • பஸ் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முன்தினம் முதல் பயணத்தை தொடங்கினர். சென்னையில் இருந்து 2 நாட்களில் அரசு பஸ்களில் மட்டும் 3.5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும் ஆம்னி பஸ்களில் 1 லட்சம் பேர் சென்றதாகவும் தெரிகிறது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு, மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்களும் வண்டலூர் வழியாக சென்றது. இதேபோல 1,400 ஆம்னி பஸ்களும் சேர்ந்து இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற அரசு பஸ்கள், ஆம்னி பேருந்துகள் வண்டலூரில் நெரிசலில் சிக்கின.

    இரவு 9 மணி முதல் 12 மணி வரை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்கள் அணிவகுத்து நின்றன.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல முடியாமல் போனதால் எல்லா பேருந்துகளும் சென்னை-திருச்சி சாலையில் நின்றன. நெரிசல் சீராக நள்ளிரவு 12 மணி ஆனது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் செல்ல ஒரே வழிதான் உள்ளது. பஸ்கள் வெளியே வர 4 வழிகள் உள்ளன. இதனால் தான் பிரச்சனை ஏற்பட்டது.

    பஸ் முனையத்திற்குள் உள்ள பஸ்கள் வெளியே போக முடியாமல் நின்றதால் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

    இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். சென்னையில் இருந்து புறப்பட்ட பஸ்கள் எந்த இடத்திலும் நெரிசலில் சிக்கவில்லை. கிளாம்பாக்கத்தில்தான் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வெளிவட்ட சாலையில் பஸ்கள் நீண்ட வரிசையில் நின்றன.

    பஸ் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்தாலும் கூட ஏதாவது ஒரு இடத்தில் எதிர்பாராமல் நடக்கும் தவறுகளால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    Next Story
    ×