என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
108 ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி
- காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது நடுரோட்டில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் 108 ஆம்புலன்சை விடாமல் வழிமறித்தார்.
- நீண்ட நேரமாக நடுரோட்டில் நின்று கொண்டு 108 ஆம்புலன்ஸை விடாமல் தடுத்து நிறுத்தினார்.
நாகர்கோவில்:
குமரி மேற்கு மாவட்டம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்திற்கு வந்து கர்ப்பிணி பெண்ணை குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக சேர்த்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தார். காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது நடுரோட்டில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் 108 ஆம்புலன்சை விடாமல் வழிமறித்தார்.
நீண்ட நேரமாக நடுரோட்டில் நின்று கொண்டு 108 ஆம்புலன்ஸை விடாமல் தடுத்து நிறுத்தினார். டிரைவரை அவதூறாக வசை பாடினார்.
இதை பார்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் அந்த சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்தார். இதற்கிடையில் ஆம்புலன்சில் இருந்த செவிலியர் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து சென்று விட்டார்.
போலீசார் இது தொடர்பாக விசாரித்தபோது அந்த நபர் குடிபோதையில் 108 ஆம்புலன்ஸை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் தனது செல்போனில் பதிவு செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திலும் வாலிபர் ஒருவர் குடிபோதையில் ரகளை ஈடுபட்டார். தற்பொழுது 108 ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸில் நோயாளிகள் இல்லாததால் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்