என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஈரோடு பாராளுமன்ற தொகுதி: 15 லட்சம் வாக்காளர்களில் 10 லட்சம் பேர் மட்டுமே வாக்குப்பதிவு செலுத்தி உள்ளனர்
- இறுதி நிலவரப்படி ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 70.59 சதவீதம் வாக்குப்பதிவானது.
- ஆண் வாக்காளர்களில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 889 பேரும், பெண் வாக்காளர்களில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 311 பேரும், திருநங்கைகள் 87 பேரும் வாக்களித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம், குமாரபாளையம் என 6 சட்டமன்ற தொகுதிகளில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 927 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 93 ஆயிரத்து 667 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 184 பேர் என மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,688 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் நீண்ட வரிசையில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
காலை 11 மணிக்கு பின்னர் வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவில் சுணக்கம் ஏற்பட்டது. இறுதி நிலவரப்படி ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் 70.59 சதவீதம் வாக்குப்பதிவானது.
இது கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை விட 2.52 சதவீதம் குறைவு ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 73.11 சதவீதம் வாக்கு பதிவானது. 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்களில் இந்த தேர்தலில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
4 லட்சத்து 52 ஆயிரத்து 491 பேர் வாக்களிக்கவில்லை. ஆண் வாக்காளர்களில் 5 லட்சத்து 31 ஆயிரத்து 889 பேரும், பெண் வாக்காளர்களில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 311 பேரும், திருநங்கைகள் 87 பேரும் வாக்களித்துள்ளனர்.