என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொட்டில்பட்டியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு
- குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
- குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
மேட்டூர்:
மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து காடையாம்பட்டி பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதன் மூலம் ஓமலூர், காடையாம்பட்டி, தொப்பூர், தாரமங்கலம், மேச்சேரி பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அனல்மின் நிலையம் செல்லும் சாலையில் காடையாம்பட்டி ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.