search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்ந்து ஏறுமுகம்: தங்கம் விலை மீண்டும் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது
    X

    தொடர்ந்து ஏறுமுகம்: தங்கம் விலை மீண்டும் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது

    • கடந்த 3 தினங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
    • வெள்ளி விலையில் கடந்த 3 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை :

    தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் தாறுமாறாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிப்பிடித்தது. அந்த வகையில் கடந்த 2-ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 505-க்கும், ஒரு பவுன் ரூ.44 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது.

    அதனைத்தொடர்ந்து விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில், மறுநாளே விலை சரிந்தது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.43 ஆயிரத்துக்கு வந்தது. தொடர்ச்சியாக விலை குறைந்துகொண்டே வந்து, ரூ.43 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது.

    விலை குறைந்து வந்த சூழ்நிலையில், கடந்த 3 தினங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதன்படி, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 383-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 64-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.43 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

    தங்கம் விலை உயர்ந்து வந்தாலும், வெள்ளி விலையில் கடந்த 3 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.74-க்கும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×