search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.எல்.சி. தலைவர் வீட்டை நோக்கி பேரணி- ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் முடிவு
    X

    என்.எல்.சி. தலைவர் வீட்டை நோக்கி பேரணி- ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் முடிவு

    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • என்.எல்.சி. தலைவர் வசிக்கும் வீட்டை நோக்கி குடும்பத்துடன் பட்டினியுடன் பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நெய்வேலி:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களது போராட்டம் இன்று 9-வது நாளாக நீடித்தது. இதில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை இந்திய காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஏ.எஸ்.இளஞ்செழியன் சந்தித்து போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிலையில் தொழிற் சங்க சிறப்பு தலைவர் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இரவு-பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் போராட்டக்களத்தில் இருந்து நேரு சாலையில் உள்ள என்.எல்.சி. தலைவர் வசிக்கும் வீட்டை நோக்கி குடும்பத்துடன் பட்டினியுடன் பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×