search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் தம்பதியிடம் நகை திருடிய 3 பெண்கள் கைது
    X

    கைதானவர்களை படத்தில் காணலாம்.

    ஒட்டன்சத்திரத்தில் தம்பதியிடம் நகை திருடிய 3 பெண்கள் கைது

    • அனிதா அணிந்திருந்த 14 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து கட்டைப்பையில் மறைத்து வைத்தார்.
    • நோட்டமிட்ட மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை திருடிச்சென்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த சகாயராஜ் தனது மனைவி அனிதா(37) என்பவருடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்தார். திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும் கோவை செல்வதற்காக ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்திற்கு வந்தனர்.

    அப்போது அனிதா அணிந்திருந்த 14 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து கட்டைப்பையில் மறைத்து வைத்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை திருடிச்சென்றனர். பஸ் ஏறியவுடன் நகையை பார்த்தபோது அது திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனிதா ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களின் பதிவை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகையை திருடியது வத்தலக்குண்டு பண்ணப்பட்டியை சேர்ந்த சத்யா(44), மதுரையை சேர்ந்த முத்துமாரி(35), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணி(31) என தெரியவந்தது.

    இவர்கள் பஸ்நிலையம் மற்றும் கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×