என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கெலவரப்பள்ளி அணையில் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு: ஆற்றோர 10 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4,480 கனஅடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
- 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஓசூர்:
கர்நாடகா மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை மற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக நாள் தோறும் மழை பெய்து வருகின்றது.
கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 4,513 கன அடி நீர் வந்தது.
இன்று வினாடிக்கு 4,480 கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4,480 கன அடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், சுற்றியுள்ள முத்தாலி, சித்தனபள்ளி, பெத்த குள்ளு, தட்டகானபள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே, பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் அணை நீரில் கலந்து நுரை பொங்கி துர்நாற்றம் வீசுகிறது.