என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே விபரீத முடிவு: பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்த காதலர்கள்
- காதலன் சத்தியம்மணி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பாகலூர் ரோட்டு பகுதியில் உள்ள என்.ஜி.ஒ காலனியில் வசித்து வருபவர் சையத் ஆலாம். இவரது மகள் சகிராபாத்திமா(வயது21). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்தார்.
அதேபோல் ஓசூர் கே.வி.நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சத்தியம்மணி (23). இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் பெற்றோர்களுக்கும் தெரியவந்ததை அடுத்து காதலர்கள் இருவரையும் இனி காதலிக்க கூடாது என்று கண்டித்துள்ளனர்.
இதனை மீறி இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். தொடர்ந்து இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு அதிகரித்ததால் சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து வாழ முடியவில்லையே என்று மன விரக்தி அடைந்து காணப்பட்டனர்.
இந்த நிலையில், இருவரும் பிருந்தாவன் பூங்காவில் ஆட்கள் இல்லாத பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.
இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சகிராபாத்திமாவை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சகிராபாத்திமா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் காதலன் சத்தியம்மணி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.