என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடும் குளிர்
- வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- அனைத்து மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடிசை, மண் வீடுகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மாண்டஸ் புயல் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு லேசான சாரல் மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி செய்யாறு பகுதிகளில் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் மேகம் மந்தமாக காணப்படுகிறது. வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து சென்னை, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளுக்கு பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் குறைவாக இருந்தது. இதனால் பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
வேலூரில் இருந்து தினந்தோறும் சென்னைக்கு 10 குளிர்சாதன அரசு பஸ் இயக்கப்படுகிறது. இன்று சுமார் 3 பஸ்கள் மட்டுமே சென்னைக்கு இயக்கப்பட்டன. மேலும் குறைந்த அளவு பயணிகள் மட்டுமே சென்றனர்.
பயணிகள் வருகைக்கு ஏற்ப சென்னைக்கு பஸ் இயக்கப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குடிசை, மண் வீடுகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் கண்காணிப்பு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி முழுவதும் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புயல் கடக்கும் வரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியூர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்