என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜி.எஸ்.டி. விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல தீர்வு எடுப்பார்- அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
- உலமாக்களுக்கு பென்சன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
- இதுவரை விண்ணப்பித்த 1,600 பேருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறுபான்மை நலத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 முதல் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மற்றும் பள்ளிவாசல்களை சீரமைக்க தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 70-க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஆலயங்களை பராமரிக்க இதுவரை 1.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வகுப்பு வாரியத்தில் 150-க்கு மேற்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதாக தெரிய வந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்து 100-க்கு மேற்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் கையகப்படுத்தப்பட்டு வக்பு வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களை மீட்கும் போது பள்ளிவாசலுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் இதற்கு வரவேற்பு உள்ளது.
உலமாக்களுக்கு பென்சன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை விண்ணப்பித்த 1,600 பேருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. உலமாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் மனைவிக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாதம் முதல் உலமாக்கள் மாத உதவி தொகை பெறுபவர்கள் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் உலமாக்கள் உதவி தொகை பெற விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீற முடியாது. வக்பு வாரியத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே அரசு தலையிட முடியும். திராவிட மாடல் ஆட்சியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
இந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று வேறுபாடு இல்லாமல் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒன்றே குலம். ஒருவனே தெய்வம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். வெளிநாடு சென்றவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நல வாரியத்தில் பதிவு செய்து சென்றவர்களுக்கு 60 வயது கடந்தாலும் அவர்களுக்கு பென்சன் வழங்குவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை மக்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு, அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்டி. வரி விதித்து இருப்பது கண்டனத்துக்குரியதாகும். அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள், வியாபாரிகள் அனைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். முதல்- அமைச்சரை வியாபாரிகளும், வணிகர்களும் சந்தித்து வலியுறுத்த உள்ளார்கள். இந்த பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் நல்ல தீர்வு காண்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்