என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் பலி
- சண்முகராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மதன்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது.
- உயிரிழந்த சண்முகராஜ், சுடலைமணி ஆகியோரது உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 42). பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (55) தொழிலாளி. இருவரும் வேலையை முடித்துவிட்டு விளாத்திகுளத்தில் இருந்து அரியநாயகிபுரத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
இதேபோன்று கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் மதன்குமார் (21). வேம்பார் அருகே உள்ள கன்னிராஜபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் சுடலைமணி (20). இவர்கள் இருவரும் வேம்பாாில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இருவரும் கல்லூரி முடித்துவிட்டு வேம்பாாில் இருந்து கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் விளாத்திகுளம்- வேம்பார் சாலையில் செவ்வலூரணி அருகே வரும்பொழுது சண்முகராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மதன்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் சண்முகராஜ் மற்றும் சுடலைமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சண்முகம் மற்றும் மதன்குமார் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் சென்று படுகாயமடைந்த சண்முகம், மதன்குமார் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் உயிரிழந்த சண்முகராஜ், சுடலைமணி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மதன்குமார், சண்முகம் ஆகிய இருவரும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.