என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முட்டல் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து நர்சை சரமாரியாக தாக்கிய கணவர்
- காயமடைந்த தீபாவை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தீபா கொடுத்த புகாரின்பேரில் கவுதமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த முட்டல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் தீபா (வயது 28). இவருக்கும், நாகர்கோவிலை சேர்ந்த கவுதமன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே அவர்கள் பிரிந்தனர். இந்தநிலையில் நேற்று காலை தீபா, சுகாதார நிலையத்தில் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கவுதமன், திடீரென தீபாவை சரமாரியாக தாக்கினார். வலியால் துடித்த அவர் அங்கிருந்து வெளியேறி அருகே இருந்த வீட்டுக்குள் ஓடினார். ஆனாலும் கவுதமன் அவரை துரத்தி சென்று தாக்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து தலைவாசல் போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் காயமடைந்த தீபாவை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீபா கொடுத்த புகாரின்பேரில் கவுதமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.