என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமத்தி வேலூர் பகுதியில் இன்று அதிகாலை கட்டி வைத்திருந்த 3 ஆடுகளை சிறுத்தை புலி கடித்து குதறியது
- வெள்ளாளபாளையம், சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் கன்றுக்குட்டி, ஆடுகளை கொன்று சிறுத்தைப்புலி தாக்கி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.
- சிறுத்தை புலியை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சூர்யாம்பாளையம், வெள்ளாளபாளையம், சுண்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் கன்றுக்குட்டி, ஆடுகளை கொன்று சிறுத்தைப்புலி தாக்கி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த சிறுத்தை புலிைய பிடிக்க நாமக்கல் வன சரக அலுவலர் பெருமாள் தலைமையில் கண்காணிப்பு கேமிரா மற்றும் டிரோன் கேமிரா மூலமும், கூண்டு அமைத்தும் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புலி நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் மின் கம்பங்களும் உயர் அழுத்த மின் வயர்களும் செல்வதால் இரவு நேரத்தில் ட்ரோன் கேமிராவை பறக்க விடுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரவு நேர டிரோன் கேமரா பறக்க விடுவதில் பின்னடைவை ஏற்படுத்தியது. அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமிராவில் சிறுத்தை புலி உருவம் பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளாளபாளையம் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தனது வீட்டின் அருகே மாடு மற்றும் கன்று குட்டிகளை கட்டி வைத்திருந்தார்.நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்த சிறுத்தை புலி பொன்னுசாமி வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த கன்று குட்டியை விட்டுவிட்டு திடீரென மாட்டின் மீது ஏறி மாட்டை கடித்துள்ளது. வலி தாங்க முடியாமல் மாடு சத்தம் போடவே வீட்டுக்குள் இருந்தவர்கள் ஓடிவந்து சத்தம் போட்டனர். சத்தத்தை கேட்ட சிறுத்தை புலி அங்கிருந்து ஓடி விட்டது.
பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு பின்புறம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பகுதிக்கு வந்த சிறுத்தை புலி இன்று அதிகாலை அங்கு கட்டி வைத்திருந்த ஆடுகளில் 3 ஆடுகளை தின்றுவிட்டு ஒரு ஆட்டை கடித்து இழுத்து சென்று விட்டது.
இது குறித்து அந்த விவசாயி வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்தபோது சிறுத்தை புலி அந்த பகுதியில் அருகாமையில் உள்ள ஒரு இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் சிறுத்தை புலியை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு சிறுத்தை புலியை தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களுடன் சிறுத்தை புலிக்கு மயக்க மருந்து செலுத்தும் 2 கால்நடை டாக்டர்களும் உள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்துள்ள வல்லுனர்களும், முதுமலை பகுதியில் இருந்து ட்ராக்கர்ஸ் எனப்படும் புலிகளின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வல்லுனர்களும், சிறப்பு பயிற்சி பெற்ற வனக்காவலர்களும் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.. இதனால் இப்பகுதியில் பரபரப்பாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்