search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணி- கடலூர் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 40 பேர் கைது
    X

    என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணி- கடலூர் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 40 பேர் கைது

    • மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் பா.ம.க. நிர்வாகிகளை சூழ்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் நிலத்தில் 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணி மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வந்தனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க. நிர்வாகிகள் 56 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதுமட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே பா.ம.க.மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி, மாணவரணி கோபிநாத், கவுன்சிலர் சரவணன், இளைஞரணி சந்திரசேகர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டனர்.

    அப்போது அங்கிருந்த போலீசார் பா.ம.க. நிர்வாகிகளை சூழ்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பா.ம.க. நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி பா.ம.க. நிர்வாகிகளை அதிரடியாக கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×