என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போதைப்பொருள் விழிப்புணர்வு- 60 கிராம நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை
- எண்ணூர் போலீசார் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம் நடைபெற்றது.
- கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை யாராவது விற்பனை செய்தால் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்க வேண்டும்.
திருவொற்றியூர்:
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள சமுதாயக்கூடத்தில் எண்ணூர் போலீசார் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் 60 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் செங்குன்றம் துணை கமிஷனர் என். மணிவண்ணன் கலந்து கொண்டு போதையில்லா சமுதாயம் அமைந்திட அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்திட கிராம தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை யாராவது விற்பனை செய்தால் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்க வேண்டும். அவர்களது ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார். இதில் இன்ஸ்பெக்டர்கள் தட்சிணாமூர்த்தி, ஜி. கண்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் பி. வின்சன்ட் ராஜரத்தினம், எம்.ரகுநாதன் எஸ்.டி. சங்கர்,எம்.கோபால், சங்க இணை செயலாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.