என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவாலங்காட்டில் காதல் திருமணம் செய்த 15 நாளில் வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்பு
- காதல் திருமணம் செய்த 15 நாளில் வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- யுவன்சங்கர்ராஜா எப்படி இறந்தார்? கிணற்றுக்குள் விழுந்தது எப்படி? கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
திண்டுக்கல்லை சேர்ந்தவர் யுவன்சங்கர் ராஜா (வயது22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நவீனா(21) என்பவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து யுவன்சங்கர் ராஜாவும், நவீனாவும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இணையத்தளத்தில் வெளியான வேலைவாய்ப்பு மூலம் திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு, பரேஸ்புரம் பகுதியில் உள்ள முயல் பண்ணையில் வேலைக்கு சேர்ந்தனர். கணவன்-மனைவி இருவரும் முயல் பண்ணையில் பராமரிப்பு பணி செய்து வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள தரைக்கிணற்றில் உள்ள தண்ணீரில் யுவன் சங்கர் ராஜா பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவாலங்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி யுவன் சங்கர்ராஜா உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
யுவன்சங்கர்ராஜா எப்படி இறந்தார்? கிணற்றுக்குள் விழுந்தது எப்படி? கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிணற்றுக்குள் யுவன்சங்கர் ராஜா விழுந்தபோது அவரை காப்பாற்ற மனைவி நவீனா முயன்றதாக தெரிகிறது. கணவன்-மனைவி இருவரும் இரவு நேரத்தில் அவ்வழியாக வந்தது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதல் திருமணம் செய்த 15 நாளில் வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.