என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கண்களில் கருப்புதுணி கட்டி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்
- வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு உரிமையாளர் தரப்பிலும், தொழிற்சங்கம் தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.
- உரிமையாளர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால் தொழிற்சங்கத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் 400-க்கு மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கூலி உயர்வு மற்றும் போனஸ், விடுப்பு சம்பளம் வழங்க கோரி போடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக புதிய ஒப்பந்தம் போடப்படாமல் விசைத்தறி உரிமையாளர்கள் காலம் தாழ்த்தி வருவதாக புகார் கூறி கடந்த 30-ந் தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
நேற்று முன்தினம் கஞ்சித் தொட்டி திறந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு உரிமையாளர் தரப்பிலும், தொழிற்சங்கம் தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தைக்கு விருதுநகர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மின்னல் கொடி, ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன், தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமை தாங்கினர்.
அப்போது உரிமையாளர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால் தொழிற்சங்கத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
தொழிற்சங்கத்தினர் அதிகாரியிடம் கூறுகையில், எங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமடையும் என்றனர்.
இந்த நிலையில் 11-வது நாளான இன்று செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிலையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.