என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காலமுறை ஊதியம் வழங்க கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் முற்றுகை
- 60 வயதை கடந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கவேண்டும்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு மதிப்பூதியத்திலிருந்து காலமுறை ஊதியம் மாற்றி அமைக்க வேண்டும். பணப்பலன், பணி தொடர்ச்சி ஆகியவை திரும்பப் பெறவேண்டும். 60 வயதை கடந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கவேண்டும். இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் முறையிட வந்தோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி பாபு தலைமையில், மாவட்ட தலைவர்கள் தயாளன், மணிவண்ணன், பன்னீர் செல்வம், சீனிவாசன், பாஸ்கரன் ஆகியோர் புகார் மனுவை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.