search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை- கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விளக்கமளித்த அமைச்சர்
    X

    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை- கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விளக்கமளித்த அமைச்சர்

    • தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மாவட்ட வாரியாக கேட்டுள்ளோம்.
    • காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி குறித்து தேர்வு மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விடுமுறைக்குப்பின் இன்று தொடங்கியது. கூட்டத்தில் குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

    அப்போது அவர், டிஎன்பிஎஸ்சியில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குரூப்-4 தேர்வில் தட்டச்சர் முதுநிலை அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மாவட்ட வாரியாக கேட்டுள்ளோம். காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி குறித்து தேர்வு மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இதுபோன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    டின்பிஎஸ்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

    Next Story
    ×