search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடைப்பணி தாமதம்: பொன்னேரி நகராட்சியை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    பாதாள சாக்கடைப்பணி தாமதம்: பொன்னேரி நகராட்சியை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
    • பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு 22 வார்டுகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.54 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு 22 வார்டுகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி நகராட்சி ஆணையர் முதல் மாவட்ட கலெக்டர் வரை அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணியை முடிக்காத பொன்னேரி நகராட்சியை கண்டித்தும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரியும் மாவட்ட செயலாளர் வி.எம். பிரகாஷ் தலைமையில் அண்ணா சிலை அருகே பா.ம.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும், சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் துலுக்காணம்,மோகன், அரவிந்த்,சமூக நீதி பேரவை மாவட்ட செயலாளர் மாசிலா மணி, முன்னாள் மாநில துணைத் தலைவர் துரை ஜெயவேல், இளைஞர்அணி செயலாளர் சுதாகர், மகளிரணி கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×