search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்கை மாறாதவர் வைகோ
    X

    கொள்கை மாறாதவர் வைகோ

    • தமிழக அரசியலை பொறுத்தவரை வைகோவை பலருக்கும் பிடிக்கும்.
    • ஈழத்தமிழர் விஷயத்தில் வைகோவிடம் சிறு கடுகளவு கூட இதுவரை மாற்றம் ஏற்படவில்லை.

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை தொடங்கிய போது அதன் பிரதான கொள்கையாக தமிழ் ஈழம் பிரச்சினை இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்ற இடங்களில் எல்லாம் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்று பேசியதுதான்.

    தமிழக அரசியலை பொறுத்தவரை வைகோவை பலருக்கும் பிடிக்கும். அரசியல் கடந்த அவரது செயல்பாடுகளை பெரும்பாலானவர்கள் ரசித்தனர். ஆனால் வைகோ ஈழத்தமிழர்கள் மீது அளவு கடந்த பாசம் காட்டியதை பெரும்பாலானவர்கள் ஏற்கவில்லை. இலங்கை விஷயத்தில் வைகோ தனது நிலைப்பாட்டை சற்று மாற்றிக்கொண்டால் ம.தி.மு.க. வளர்ச்சிக்கு நன்றாக இருக்கும் என்று பொதுப்படையாக பேசப்பட்டது. இதை வைகோவிடமும் சிலர் நேரிலேயே தெரிவித்தனர். என்றாலும் வைகோ தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

    ஈழத்தமிழர் விஷயத்தில் வைகோவிடம் சிறு கடுகளவு கூட இதுவரை மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து அவர் அதற்காக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நடக்கும் ஈழத்தமிழர் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று தமிழக அரசியல் தலைவர்களில் முதல் ஆளாக குரல் கொடுத்தார். இதன்மூலம் எடுத்த கொள்கையில் இருந்து மாறாதவர் என்ற மிகப்பெரிய சிறப்பை வைகோ பெற்றிருக்கிறார். ஆனால் ம.தி.மு.க. வளர்ச்சிக்கு இது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதுதான் இன்று வரை அவரது கட்சி தொண்டர்களின் நியாயமான, நிதர்சனமான எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×