search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையத்தில் ரேஸ் பைக்கில் வந்து பெண் கவுன்சிலரிடம் நகை பறித்த கொள்ளையர்கள்
    X

    கடையத்தில் 'ரேஸ் பைக்'கில் வந்து பெண் கவுன்சிலரிடம் நகை பறித்த கொள்ளையர்கள்

    • கடையம் அருகே ஆசீர்வாதபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சமுத்திரக்கனியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
    • சமுத்திரகனி கடையம் போலீசில் தெரிவித்தார். அதன்பேரில் அந்த சாலையில் இருந்த சோதனை சாவடிகளில் இருந்த போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள புலவனூர் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் தேவக்கனி. இவரது மனைவி சமுத்திரக்கனி(வயது 50). இவர் கீழக்கடையம் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்.

    கடையம் கானாவூரை சேர்ந்தவர் ஞானம்(36). இவர் பெரும்பத்து பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் நீரேற்று நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஞானம் ஓட்டி சென்றார்.

    கடையம் அருகே ஆசீர்வாதபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சமுத்திரக்கனியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுதொடர்பாக சமுத்திரகனி கடையம் போலீசில் தெரிவித்தார். அதன்பேரில் அந்த சாலையில் இருந்த சோதனை சாவடிகளில் இருந்த போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது கடையம்-தென்காசி சாலையில் நம்பர் பிளேட் இல்லாத ரேஸ் மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஹெல்மட் அணிந்தபடி 2 கொள்ளையர்கள் சென்றதும், அவர்கள் சமுத்திரக்கனியிடம் செயினை பறித்ததும் தெரியவந்தது.

    தொடர் விசாரணையில், இந்த சம்பவத்தை நிகழ்த்துவதற்கு முன்பாகவே பொட்டல்புதூரில் அந்த கொள்ளையர்கள் சாலையில் சென்ற பெண்ணிடம் ஒரு செயினை பறித்து வந்ததும், அது கவரிங் நகை என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×