என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே உலக உணவு பாதுகாப்பு தின விழா
- தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
- உணவு கலப்படம் மற்றும் உணவு கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே வீரசோழபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் தனியார் கல்லூரி இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், அன்புபழனி, இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும், உணவு கலப்படம் மற்றும் உணவு கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து உணவு பாதுகாப்பு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் துணை முதல்வர் சுரேஷ் நன்றி கூறினார்.