search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாரை ஆபாசமாக பேசிய வாலிபர்- பள்ளி தலைமை ஆசிரியருக்கு செல்போனில் கொலை மிரட்டல்
    X

    போலீசாரை ஆபாசமாக பேசிய வாலிபர்- பள்ளி தலைமை ஆசிரியருக்கு செல்போனில் கொலை மிரட்டல்

    • குடி போதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் தீபன் (35). பெயிண்டிங் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் பவானி சாகர் அரசு தொடக்கப்பள்ளிக்கு தனது மகனை பார்க்க வந்தார்.

    அப்போது அவர் குடி போதையில் இருந்தார். இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவரை பள்ளிக்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதையடுத்து அவர் ஆசிரியர்களை ஆபாசமாக பேசி னார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பவானி சாகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பள்ளியில் ஆசிரியரிடம் தகராறு செய்த தீபனை வெளியே செல்லுமாறு கூறினர். ஆனால் தீபன் வெளியே செல்ல மறுத்து தகராறு செய்தார்.

    இதை தொடர்ந்து குடி போதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை மோட்டார் சைக்கிளுடன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் தீபன் திடீரென தனக்கு தானே பாட்டிலால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் கிழித்துக் கொண்டார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று வந்தார்.

    போலீசாரை குடி போதையில் தீபன் ஆபாசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தீபன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதை தொடர்ந்து தீபன் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு போன் செய்து தகாத வார்த்தையால் பேசி, 'காலை என்ன செய்கிறேன் பார்' என கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இது குறித்து பள்ளி தலைைம ஆசிரியர் பவானி சாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தலைமறைவான தீபனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×