search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை பார்வைத்திறன் குறையுடையோர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    தஞ்சை பார்வைத்திறன் குறையுடையோர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை- கலெக்டர் தகவல்

    • பிரெய்ல் புத்தகங்கள் மற்றும் கணித உபகரணங்கள் இலவசமாக பெற்றுத்தரப்படுகிறது.
    • அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத மாணவர் தேர்ச்சியை தொடர்ந்து அளித்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் தஞ்சையில் பார்வைத்தி றன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 2023-2024-ம் கல்வியா ண்டிற்கான 1-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இந்த பள்ளியில் சிறப்பாசிரியர்களால் பார்வையற்ற மற்றும் பார்வைத்திதிறன் குறையு டைய மாணவர்களுக்கு பிரத்தியேக முறையான பிரெய்ல் வழி கல்வி வாயி லாக கற்பிக்கப்படுகிறது.

    மேலும் இந்த பள்ளியில் மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள், மாநில அரசால் வழங்கப்ப டும் கல்வி உபகரணங்கள், சீருடை, காலணி, பிரெய்ல் புத்தகங்கள் மற்றும் கணித உபகரணங்கள் இலவசமாக பெற்றுத்தரப்படுகிறது.

    இந்த பள்ளி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத மாணவர் தேர்ச்சியினை தொடர்ந்து அளித்து வருகிறது. மாணவர்களுக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யப்ப டுகிறது. இந்த பள்ளியின் விடுதியில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு இடமும், ஆரோக்கியமான உணவு மற்றும் தூய்மையான குடிநீர் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.இங்கு மாணவர் சேர்க்கை க்கு, பார்வைத்திறன் குறை யுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சை, என்ற முகவரியில் அணுகலாம். மேலும் அலுவலக தொலைபேசி எண் 04362-272222 மற்றும் தலைமை ஆசிரியரின் செல்போன் எண்கள் 9629495808, 8903263066 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×