என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆண்டிபட்டியில் தேனீர் கடை பூட்டை உடைத்து பணம், பைக் திருட்டு
- வினோதம் என்னவெனில் டி.வி.எஸ். 50 வாகனத்தில் வந்த கும்பல் தங்கள் வாகனத்தை கடை முன்பு நிறுத்தி விட்டு கடைக்குள் இருந்த ஸ்பிளண்டர் பிளஸ் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர்.
- இன்று காலை கடை முன்பு டி.வி.எஸ். 50 வாகனம் நிற்பதையும் ஷட்டரின் பூட்டு உடைந்து கிடப்பதையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 44). இவர் சத்யாநகர் பஸ் ஸ்டாப் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். தினமும் இரவில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் கடைக்கு வந்த ஒரு மர்ம கும்பல் கடை ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
கடைக்குள் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.20000 பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதில் வினோதம் என்னவெனில் டி.வி.எஸ். 50 வாகனத்தில் வந்த கும்பல் தங்கள் வாகனத்தை கடை முன்பு நிறுத்தி விட்டு கடைக்குள் இருந்த ஸ்பிளண்டர் பிளஸ் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர்.
இன்று காலை கடை முன்பு டி.வி.எஸ். 50 வாகனம் நிற்பதையும் ஷட்டரின் பூட்டு உடைந்து கிடப்பதையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் முத்துகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கடைக்கு வந்து பைக் மற்றும் பணம் திருடு போனது குறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர் விட்டுச் சென்ற பைக் அவர்களுடையதா அல்லது அதுவும் திருடி எடுத்து வந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.