search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை- இலங்கை பயணிகள் கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்
    X

    நாகை- இலங்கை பயணிகள் கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்

    • 18-ந்தேதிக்கு பிறகு தொடங்க கப்பல் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
    • சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை நேற்று நிறுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது.

    ஆரம்பத்தில் தினமும் இயங்கி வந்த பயணிகள் கப்பல் போதிய அளவு பயணிகள் இல்லாத காரணத்தால் வாரத்தில் 3 நாட்கள் இயக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி, செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்பட்டது.இந்நிலையில், பயணிகளின் வருகை அதிகரித்த காரணத்தால் கடந்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி முதல் சனிக்கிழமைகளிலும் இயக்கப்பட்டது.

    பின்னர், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 8-ந்தேதி முதல் வாரத்தில் 5 நாட்கள் என செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை நேற்று (சனிக்கிழமை) நிறுத்தப்பட்டது.

    மீண்டும் இந்த கப்பல் சேவையை அடுத்த மாதம் (டிசம்பர்) 18-ந்தேதிக்கு பிறகு தொடங்க கப்பல் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. மேலும், இந்த பயணத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் பின்னர் தெரிவிக்கப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×