search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விஜய்யின் லியோ பட பாடலை மாற்றி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தஞ்சை போலீசார்
    X

    விஜய்யின் லியோ பட பாடலை மாற்றி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தஞ்சை போலீசார்

    • இந்த பாடல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் போதை பொருள் தடுப்பு குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சையில் நடிகர் விஜய் பாடலை மாற்றி அமைத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

    கடந்த 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்தின் பாடலான நான் ரெடி தான் வரவா? அண்ணன் நான் கிளம்பி வரவா? என்ற வரிகளுடன் கூடிய பாடல் வெளியானது.

    இந்த பாடல் அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்று உள்ளது.

    இதனால் இந்தப் பாடல் வரிகளைக் கொண்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி னால் கண்டிப்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என்று தஞ்சாவூர் போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக பாடல் வரிகளில் சிலவற்றை மட்டும் மாற்றினர்.

    அதன்படி நான் ரெடி தான் வரவா? போலீஸ் நான் கிளம்பி வரவா? என்று வாசகமாக மாற்றி அமைத்துள்ளனர்.

    இந்த விழிப்புணர்வு வாசகம் போதைப் பழக்கம் மற்றும் போதை பயன்பாடு குறித்து புகார் தெரிவிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

    புகார் தெரிவிக்க 9042839147 என்ற செல்போன் எண்ணும் கொடுத்துள்ளனர்.

    தற்போது இந்த விழிப்புணர்வு போஸ்டர் வரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    போலீசுக்கும், பொதும க்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தவும், போதைப் பொருட்களை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்பதை உணர்த்தவும் டிரெண்ட் ஆகும் திரைப்படப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    போலீசார் இந்த விழிப்புணர்வு வாசகம் கண்டிப்பாக போதை பொருள் பயன்பாட்டை தடுக்கும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×