search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
    X

    மர்மமான முறையில் இறந்த வாலிபரின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

    • மனைவி, உறவினர்கள் மீது வழக்கு பதிவு
    • உடற் கூறு ஆய்வுக்கு பின் மீண்டும் உடலை அடக்கம் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கீரைப்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). கூலி தொழிலாளி இவர், கடந்த 1-ம் தேதி அவரது வீட்டின் முன்புறம் உள்ள வள்ளிமதுரை பாசன கால்வாயில் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட குடும்பத்தினர், காவல் மட்டும் வருவாய்த் துறைக்கு தெரிவிக்காமல் புதைத்து விட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார், அரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், சந்தே கத்திற்கிடமாக உயிரிழந்த ராஜாவின் உடலை, காவல் மற்றும் வருவாய்த் துறையி னருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டு மென தெரி வித்துள்ளார்.

    இதன்பேரில், ராஜாவின் மனைவி கனகா (34) மற்றும் உறவினர்கள் சிலர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து அரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்ததாக உயிரிழந்த ராஜாவின் தயார் ராதாமணி, கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் அரூர் வருவாய் வட்டாட்சியர் கனிமொழி, தலைமையிலான காவல் ஆய்வாளர் பாஸ்கர பாபு , மருத்துவர் வசந்த், மூத்த மருந்தாளுனர் கோவிந்தராஜ், உள்ளிட்ட குழுவினர்கள் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து உடற் கூறு ஆய்வு செய்தனர், உடற் கூறு ஆய்வுக்கு பின் மீண்டும் உடலை அடக்கம் செய்தனர்.

    உடற் கூறு ஆய்வுகள் குறித்து காவல் மற்றும் வருவாய் துறையிடம் கேட்டபோது உடலுறுப்புகள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் பிறகு வரும் தகவலை பொறுத்துத்தான் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர்.இந்த சம்பவம் அப்பகு தியில் பெரும் பரபரப்பை யும்,சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×