என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் தான் என்னுடைய தலைமை ஆசிரியர்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
- முதலமைச்சரை சந்திக்க செல்லும் போது பரீட்சைக்கு செல்லும் பிள்ளைபோல் தயாராவோம்.
- கல்விக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்.
கவுண்டம்பாளையம்:
கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 413 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பள்ளியில் தற்போது உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மார்ட்டின் குழுமம் ரூ.7 கோடி நிதி ஒதுக்கி, இந்த பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறைகள், புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து இன்று பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, அங்குள்ள பள்ளியின் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த மாணவி ஒருவர் நாங்கள் இதுவரை உங்களை டி.வி.யில் மட்டுமே பார்த்து இருந்தோம். தற்போது நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களை அப்பா என்று அழைத்து கொள்ளலாமா என கேட்டு அப்பா என்று அழைத்தது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த நாள் மிகவும் நிறைவான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் சொல்கிறேன். ஒவ்வொரு நாளுமே நிறைவான நாள் தான். ஏனென்றால் நம்முடைய தி.மு.க. ஆட்சியே நிறைவான ஆட்சியாக தான் இருக்கிறது. மக்கள் அனைவரும் அதை தான் சொல்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.
தமிழக முதல்-அமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்விக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். கல்வியில் செய்யும் செலவானது நல்ல சமுதாயம் என்ற வட்டியை தரும். பிள்ளைகள் படித்தால் சமுதாயம் பயன்பெறும்.
பள்ளிகளுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மாணவர்கள் தங்கள் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்த வேண்டும். படித்து முடித்து நல்ல நிலையை அடையும் போது மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியை மறந்து விடாதீர்கள். நீங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது ஒரு வகையில் நீங்கள் உதவி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் பலரை விழுதுகள் என்ற செயலியில் இணைத்துள்ளோம். அதில் 7 லட்சம் பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை தங்கள் பள்ளிக்கு செய்து வருகிறார்கள்.
என்னுடைய தலைமை ஆசிரியர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். நாங்கள் அவரை சந்திக்க செல்லும் போது, பரீட்சைக்கு தயாராகும் பிள்ளைபோல தயாராவோம். ஏனென்றால் எங்களை விட அவர் அதிகம் தெரிந்து வைத்து இருப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மார்ட்டின் குழுமத்தின் இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்