search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
    X

    அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்திய காட்சி.

    அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • இவர்களுக்கு வசந்தா என்ற பெண், பணிகளை பிரித்து வழங்கி வரும் வேலையை செய்து வருகிறார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வசந்தா என்ற பெண், பணிகளை பிரித்து வழங்கி வரும் வேலையை செய்து வருகிறார்.

    இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்த வசந்தா அலுவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக கொடுப்பதாக பேசிக் கொண்டிருந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை துப்புரவு பணியாளர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் துப்புரவு பணியாளர்கள் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்களிடம் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் மற்றும் நரசிங்கபுரம் நகரமன்ற தலைவர் அலெக்சாண்டர் நகர மன்ற துணைத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    துப்புரவு பணியாளர்கள் கூறும் போது சரியாக பணிகளை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து அதிகாரிகள் சத்தம் போடுகின்றனர். ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×