என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவெண்ணைநல்லூர் அருகே அங்காளம்மன் கோவில் கதவை உடைத்து பணம், நகை திருட்டு
Byமாலை மலர்28 July 2023 3:17 PM IST
- பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
- அம்மனின் கழுத்தில் இருந்த தாலிப் பொட்டையும் காணவில்லை.
விழுப்புரம்:
திருவெண்ணை நல்லூர் அருகே மேல்தனி யாளம்பட்டு கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரி ராஜீவ்காந்தி (வயது 36) வழக்கம்போல நேற்றிரவு பூஜைகளை முடித்துக் கொண்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். மேலும், அம்மனின் கழுத்தில் இருந்த தாலிப் பொட்டையும் காணவில்லை. இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் ராஜீவ்காந்தி புகாரளி த்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், மேல்தனியாளம்பட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×