என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்
- தண்ணீர் அருந்த வரும் யானை தொட்டியினை தேடி தாகத்துடன் வரும் யானையை சுற்றுலா பயணிகள் துன்புறுத்துவதால் மிரண்டு பிழியபடி சுற்றுலா பணியை தாக்க முயற்சி செய்கிறது.
- வனப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை ஒகேனக்கல், பென்னாகரம் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.
பென்னாகரம்,
கர்நாடக மாநிலங்களில் வறட்சி நிலவும் போது, வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக ஆண்டுதோறும் கர்நாடக தமிழக எல்லை பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளுக்குள் இடம்பெயர்கின்றனர்.
இந்த நிலையில் இந்தான்டில் ஒகேனக்கல் வனப்பகுதிக்குள் ஒற்றை யானை இடம் பெயர்ந்துள்ளது.
இந்த யானை வனப்பகுதிகளில் உணவு அருந்திவிட்டு குடிநீருக்காக ஒகேனக்கல்லில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பென்னாகரம் செல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் குழாயின் வால்வுகளில் இருந்து வெளியேறப்படும் தண்ணீர் தொட்டியில் காலை மற்றும் மாலை வேளையில் நீர் அருந்துவதற்கு வருகிறது.
தமிழகத்தின் முதன்மை சுற்றுலா தளமாக ஒகேனக்கல் பகுதிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணமாக உள்ள நிலையில் அடர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானையை சாலை ஓரத்தில் நின்று தண்ணீர் குடிப்பதை கண்டதும் அதன் அருகில் வாகனங்களை நிறுத்துவது, வாகனங்களில் அதிக ஒலியை எழுப்புவது, அருகில் சென்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் வனப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தாலும், போதுமான குடிநீர் இல்லாததால் வழக்கமாக தண்ணீர் அருந்த வரும் யானை தொட்டியினை தேடி தாகத்துடன் வரும் யானையை சுற்றுலா பயணிகள் துன்புறுத்துவதால் மிரண்டு பிழியபடி சுற்றுலா பணியை தாக்க முயற்சி செய்கிறது.
வனப்பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை ஒகேனக்கல், பென்னாகரம் வனத்துறையினர் கண்காணித்து, காலை மற்றும் மாலை வேளையில் சுற்றுலா வரும் பயணிகளின் துன்புறுத்தல் இன்றி எவ்வித இடையூறுகளும் இல்லாத வகையில், நீர் அருந்திய பின்னர் ஒற்றை யானையை வன பகுதிக்குள் இடையூரின்றி செல்ல சுற்றுலா பயணிகளிடம் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்த வேண்டாம் என வன அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்