search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றில் மூழ்கிய தொழிலாளி சாவு
    X

    ஆற்றில் மூழ்கிய தொழிலாளி சாவு

    • நாகசமுத்திரத்தில் உள்ள ஆற்றில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது.
    • முனியம்மாள் அங்கு சென்று பார்த்தபோது தனது கணவர் ஆற்றில் மூழ்கி இறந்தார் என்பது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது55).

    தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பந்தாரஅள்ளியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். மாலை நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன முருகனின் மனைவி முனியம்மாள் தனது கணவரை பந்தாரஅள்ளி வந்து பல இடங்களில் தேடிபார்த்தார். அப்போது அவர் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நாகசமுத்திரத்தில் உள்ள ஆற்றில் ஒரு ஆண் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது. உடனே முனியம்மாள் அங்கு சென்று பார்த்தபோது தனது கணவர் ஆற்றில் மூழ்கி இறந்தார் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன் ஆற்றில் குளிக்கும்போது இறந்து விட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×