search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு- அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    தஞ்சை மீனாட்சி மருத்துவமனைக்கான பாராட்டு பத்திரத்தை அதன் தலைவர் டாக்டர். குருசங்கரிடம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

    தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு- அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளித்து உள்ளனர்.
    • தொற்றுக்கான இடர்வாய்ப்பு இல்லாத ஒரு பாதுகாப்பான சூழலையும் இதன்மூலம் வழங்கியிருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் பன்முக சிகிச்சைப் பிரிவுகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மருத்துவமனையின் 10-ம் ஆண்டு விழா நடந்து வருகிறது.

    அமைச்சர் சுப்பிரமணியன்

    இதன் ஒரு பகுதியாக பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மேம்பட்ட பேச்சு சிகிச்சை மையத்தை தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது ;-

    "சென்னை போன்ற பெருநகரத்தில் பன்முக சிறப்பு பிரிவுகளை கொண்ட பெரிய மருத்துவமனையைத் தொடங்கி நிர்வகிப்பது என்பதே ஒரு பெரிய சவாலாக இருக்கின்ற நிலையில், மூன்றாம் அடுக்கு நகரமாக இருக்கின்ற போதிலும் கூட இங்கு தொடங்கப்பட்ட மீனாட்சி மருத்துவமனை பெருவளர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    அதுமட்டுமன்றி, ஒட்டுமொத்த டெல்டா பிராந்தியத்தில் பொதுமக்கள் சிகிச்சைக்காக விரும்பித் தேடிவரும் மருத்துவமனையாக உயர்ந்திருப்பது.

    இதன் பெருமையை எடுத்துக்கூறுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாரடைப்பு போன்ற அவசரநிலை நேர்வுகள் ஏற்படும்போது, இப்பகுதி மக்கள் நோயாளிகளை சென்னை போன்ற பெருநகரங்களுக்கு அழைத்து ச்செல்ல வேண்டிய கட்டாயமிருந்தது.

    ஆனால், இப்போது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் காரணமாக, தஞ்சை நகரிலேயே மிதமான கட்டணத்தில் மேம்பட்ட மருத்துவ சிகிச்சையை உரிய நேரத்திற்குள் பெறுவது சாத்தியமாகியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளித்து உள்ளனர்.

    6 அடுக்கு பாதுகாப்பு

    குறிப்பாக 2018-ம் ஆண்டில் கஜா புயலின் காரணமாக, டெல்டா பிராந்தியத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு இலவச வீடுகளை கட்டித்தந்தது மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு மீண்டும் உயிரூட்டுவதற்காக இலவச தென்னை மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கியதற்காக மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கரை பாராட்டுகிறேன்.

    கோவிட் பெருந்தொற்று பரவல் காலத்தின்போது கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இம்மருத்துவமனையும் மற்றும் இதன் மருத்துவர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

    6 அடுக்கு கொண்ட பாதுகாப்பு கட்டமைப்பையும் இம்மருத்துவமனை அறிமுகம் செய்து, நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் மற்றும் பிற பணியாளர்களுக்கும் தொற்றுக்கான இடர்வாய்ப்பு இல்லாத ஒரு பாதுகாப்பான சூழலையும் இதன்மூலம் வழங்கியிருக்கிறது.

    அறுவை சிகிச்சை அரங்குகளில் மருத்துவர்களுக்கு ஒரு ஹுட் வழியாக வென்ட்டிலேட்டரி சர்க்கியூட்ஸ்களிலிருந்து அடுத்தக்கட்ட மருத்துவ தரத்திலான காற்றினை பாதுகாப்பாக வழங்கக்கூடிய உலகின் முதல் சாதனை அமைப்பான தஞ்சாவூர் காற்று சுத்திகரிப்பு சுவாச சாதனம் என்ற குறைந்த செலவிலான ஒரு நவீன சாதனத்தை இம்மருத்துவமனை கண்டறிந்து அறிமுகம் செய்தது என்பதை நான் அறிந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கே பெருமையளிக்கின்ற ஒரு விஷயம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டாக்டர் குருசங்கர்

    இதையடுத்து மீனாட்சி மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் பேசியதாவது ;-

    "டெல்டா பிராந்தியத்திற்கு உலகத்தரத்திலான என்.ஐ.சி.யூ பிரிவை நிறுவி, அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

    பச்சிளம் குழந்தைகளுக்கு, குறிப்பாக உரிய காலத்திற்கு முன்பு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு விரிவான சிகிச்சைப் பராமரிப்பை வழங்குவதற்கு அனைத்து வசதிகளையும், சாதனங்களையும் இது கொண்டிருக்கிறது.

    இதைப்போலவே இங்கு புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் எமது பேச்சு சிகிச்சை மையமும் நவீனமானது.

    அவசியமான சாதனங்கள், கட்டமைப்பு வசதிகளுடன் குழந்தைகளது செவித்திறன் மற்றும் தகவல் பரிமாற்ற கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பேச்சு மொழி சிகிச்சை நிபுணர்கள், கேள்திறன் மருத்துவ நிபுணர் மற்றும் ஒரு முழுமையான மருத்துவ மேலாண்மைக் குழு இம்மையத்தில் இருக்கிறது.

    ஒட்டுமொத்த டெல்டா பிராந்தியத்தில் 6 தேசிய அளவிலான தர சான்றாக்கங்களைப் பெற்றிருக்கும் ஒரே மருத்துவமனை எங்களுடைய என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

    கடந்த காலத்தில் பரவலாக விளையாடப்பட்ட விளையாட்டுகளை நினைவுபடுத்தும் வகையில் "திருவிழா" என்ற நிகழ்வையும் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கொண்ட "ஸ்டார் நைட்" நிகழ்வையும் இன்று ஏற்பாடு செய்து நடத்துகிறோம்.

    தஞ்சை மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்து 20,000-க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×