search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கழிவுநீர் தேங்கி சாக்கடையாக மாறிய பட்டுக்கோட்டை கிளை வாய்க்கால்
    X

    கழிவுநீர் தேங்கி சாக்கடையாக மாறி உள்ள வாய்க்கால்.

    கழிவுநீர் தேங்கி சாக்கடையாக மாறிய பட்டுக்கோட்டை கிளை வாய்க்கால்

    • அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை -முத்துப்பேட்டை ரோடு பகுதியில் உள்ள ராஜாமடம் கல்லணை கால்வாயின் நாடியம்பாள்புரம் கிளை வாய்க்கால் வழியாக கடந்த 60 ஆண்டுகளாக விவசாய பாசனத்திற்கு காவிரி நீர் சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த கிளை வாய்க்காலில் முறையாக மராமத்து பணிகள் நடைபெறாததால் தண்ணீர் செல்ல வழியின்றி அந்த வாய்க்காலின் கரையோர பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் டீக்கடை கழிவுகள் பாசன வாய்க்காலில் தேங்கி சாக்கடையாக தேங்கி இருக்கிறது.

    இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    குறிப்பாக பட்டுக்கோட்டை- முத்துப்பேட்டை சாலையில் இந்த வாய்க்கால் செல்லும் வழியில் கழிவுநீர் தேங்கி பாசி பிடித்து மோசமான நிலையில் உள்ளது.

    துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    மேலும் கொசு அதிகமாக உற்பத்தி ஆவதால் டெங்கு, மலேரியா போன்ற வியாதிகள் ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர்.

    எனவே நூற்றுக்க ணக்கான குடும்பங்கள் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வைத்தத கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×