search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லில் கூட்டம் அதிகரிக்கும்போது தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட வேண்டும்
    X

    ஒகேனக்கல் மெயின்அருவியில் இருந்து காவிரி ஆற்றில் குடிபோதையில் தவறிவிழுந்த சுற்றுலா பயணியை பரிசல் ஓட்டிகள் மீட்டு கரையோர பகுதிக்கு கொண்டு வந்த காட்சி.

    ஒகேனக்கல்லில் கூட்டம் அதிகரிக்கும்போது தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட வேண்டும்

    • அருவியின் பாதுகாப்பு கம்பிகளின் மீது ஏறிய போது நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • தொங்கு பாலத்தின் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பரிசல் ஓட்டிகள் சுற்றுலாப் பயணியை ஆற்றில் அடித்து வருவதை கண்டதும் உடனடியாக அவரை மீட்டனர்.

    ஒகேனக்கல்,

    தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று விடுமுறை நாள் என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

    சுற்றுலாப் பயணிகள் எண்ணை தேய்த்து மெயின் அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மெயின் அருவியின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்ததால், மறுப்பகுதி மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் தனியார் பார்களில் இருந்து மது பாட்டில்களை வாங்கி கொண்டு தடை செய்யப்பட்ட இடங்களில் மது குடித்து விட்டு காவிரி கரையோரத்தில் ஆபத்தான இடங்களில் குளித்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணி ஒருவர் மது போதையில் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும்போது, அருவியின் பாதுகாப்பு கம்பிகளின் மீது ஏறிய போது நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

    அப்போது தொங்கு பாலத்தின் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பரிசல் ஓட்டிகள் சுற்றுலாப் பயணியை ஆற்றில் அடித்து வருவதை கண்டதும் உடனடியாக அவரை மீட்டு கரையோரப் பகுதிக்கு எடுத்துச் சென்று முதலுதவி செய்து அவசர சிகிச்சைக்காக ஊட்டமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சுற்றுலாப் பயணி குணமடைந்து வீடு திரும்பினார்.

    வார விடுமுறை நாட்க–ளில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு–படுத்தப்பட்டு வருவதாலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்ப–டும் மெயின் அருவி, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளில் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படாத–தாலும், தனியார் பார்களில் விற்கப்படும் மது–பானங்களை சில பயணிகள் வாங்கி குடித்துவிட்டு இதுபோன்று தவறான செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே, அதனை தடுக்கும் விதமாக மெயின்அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் குளிப்பதற்காக கடினமான தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

    மேலும், மெயின்அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றங்கரை–யோரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பின் போது போலீ–சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×