search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்-கேரள காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
    X

    ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்-கேரள காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

    • உண்ணாவிரத போராட்டத்தை கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பல்ராம் துவக்கி வைத்து பேசினார்.
    • பி.ஏ.பி.திட்டத்தில் நீர் பற்றாக்குறை இருந்து வருவதால் நீர் பங்கீட்டில் தமிழக- கேரளம் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

    பொள்ளாச்சி

    பரம்பிகுளம்-ஆழியாறு திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டி.எம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் நீர் பகிர்மானம் செய்துகொள்ளவேண்டும்.

    இதில் பி.ஏ.பி.திட்டத்தில் நீர் பற்றாக்குறை இருந்து வருவதால் நீர் பங்கீட்டில் தமிழக- கேரளம் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்த நிலையில், கேரளாவிற்கு தண்ணீர் வழங்கும் ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு கேரளத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள மாநிலத்தில் பா.ஜ.க, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    கேரள மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பாலக்காடு மாவட்டம், சித்தூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    உண்ணாவிரத போராட்டத்தை கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் பல்ராம் துவக்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திர த்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் பாரதப்புழா விவசாயிகளை வறட்சியிலும், குடிநீர் பற்றாக்குறையையும் ஏற்படுத்தும்.

    இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிடவேண்டும். திட்டத்தை கேரள அரசு தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் மேலும் தொடர்ந்து போராட்டங்கள் செய்யப்படும்.

    சித்தூர் எம்எல்ஏவும், அமைச்சருமான கிருஷ்ணன்குட்டி இருமாநில தண்ணீர் பிரச்சனையில் தொடர்ந்து எதிர்வினை யாற்றிவருகிறார். கடந்த காலங்களில் கிருஷ்ணன்குட்டி எம்எல்ஏவாக இருந்தபோது தமிழகத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். தற்போது, ஒட்டன்சத்திரம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை எதிர்க்காமல் அமைதி காத்துவருகிறார். இது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சுமேஷ் அச்சுதன், கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் சதானந்தன், ப்ரீத், கே.எஸ்.தனிகாச்சலம், கோபால்சாமி, ராஜமாணிக்கம், சீபா உட்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×