search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட்டில் கழிப்பிட வசதியை மேம்படுத்த வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    X

    பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட்டில் கழிப்பிட வசதியை மேம்படுத்த வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    • சந்தைக்கு வரும் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • கழிப்பிடங்கள் அனைத்தும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பழைய மார்க்கெட்டில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காய்கறிகள் சந்தை நடத்தப்பட்டு வந்தது.

    கால்நடை சந்தை

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே மார்க்கெட்டுக்குள் வைத்து ஆடு மற்றும் மாடுகள் சந்தையும் புதிதாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சந்தைக்கு பொருட்கள் மற்றும் ஆடு, மாடுகள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியாக பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட் பகுதி இருப்பதால் பொது மக்களின் கழிப்பிட வசதிக்காக போர்வெல் அமைத்து தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பிட கட்டிடம் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சரியாக பராமரிபபு இல்லாமல் தண்ணீர் வசதியின்றி கழிப்பிடங்கள் அனைத்தும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அதனை மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    சமூகஆர்வலர்கள் கோரிக்கை

    இதனால் சந்தை நடை பெறும் நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கீழப்பாவூர் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் வியா பாரிகளின் நலன் கருதி பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட்டுக்குள் இயங்காமல் இருக்கும் கழிப்பிட கட்டிடத்தில் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

    Next Story
    ×