search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கும் பணி தொடக்கம்
    X

    பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கப்பட்டது.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு குடை வழங்கும் பணி தொடக்கம்

    • பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்களை மருதூர் ரோட்டரி சங்க தலைவர் கண்ணன் வழங்கினார்.
    • பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அகில இந்திய முன்னாள் படைவீரர்கள் நலச்சங்க தலைவர் தமிழரசன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு குடை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்களை மருதூர் ரோட்டரி சங்க தலைவர் கண்ணன் வழங்கினார்.

    வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் குடை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அகில இந்திய முன்னாள் படை வீரர்கள் நலச்சங்க தலைவர் தமிழரசன் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் அப்துல் கலாம் படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அழகிரி பாலன், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் தீபா, முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் இலக்குவன், முன்னாள் செயலாளர் சக்திதாசன், சமூக ஆர்வலர்கள் கோமதி, ஆறுமுகம், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் வெற்றியழகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×