search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
    X

    கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

    • பள்ளிப்பட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
    • பாறையின் மீது நின்று கொண்டிருந்தபோது திடீரென்று கால்தவறி கிணற்றுக்குள் விழுந்ததார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சுரேஷ் (வயது39). இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும் உள்ளார்.

    கூலித்தொழிலாளியான சுரேஷ் சம்பவத்தன்று பி.பள்ளிப்பட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது பாறையின் மீது நின்று கொண்டிருந்தபோது திடீரென்று கால்தவறி கிணற்றுக்குள் விழுந்ததார்.

    இதில் தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் அடைந்த சுரேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுரேஷின் மனைவி விஜயா மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×