search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு
    X

    தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு

    • ஐப்பசி மாதம் தேய்பிறை பிரதோஷத்தையொட்டி அனைத்து சிவன் கோயில்க ளிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில், ஐப்பசி மாதம் பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. முதலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதே போன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தருமபுரி குமாரசா மிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவில், தருமபுரி கடைவீதி அங்காள பர மேஸ்வரி அம்மன் உடனா கிய மருதவா ணேஸ்வரர் கோவில், தீய ணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரக தாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசா கரம் சோ மேஸ்வரர் கோவில், சவு லுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தருமபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதேபோல் பிரசித்தி பெற்ற பையர்நத்தம் அமிர்தேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ சிறப்பாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் கிராமத்தில், மயிலை மலை ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த மலைக்கோ யில் அடிவா ரத்தில் எழுந்தரு ளியுள்ள அமிர்தே ஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை பிரதோ ஷத்தையொட்டி பக்தர்கள் வழிபட்டனர்.

    இதில் நந்தி பெருமானுக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், அபிஷேக பொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    Next Story
    ×